நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் மீது முட்டை அடித்து தங்க சங்கிலி பறிப்பு..!

0 2239

சென்னை தாம்பரம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண் மீது முட்டை அடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை சேலையூர் போலீசார் தேடி வருகின்றனர்.

மாடம்பாக்கம் சுதர்சன் நகரை சேர்ந்த கவிதா என்பவர் இன்று காலை வழக்கம்போல் கருமாரியம்மன் கோவில் தெருவில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் முட்டையை அடித்ததும் அவர் நிலைதடுமாறியுள்ளார். அவர்கள் கவிதாவை கீழே தள்ளி தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கவிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments