சங்கர் பேர்லே எழுது.. ரோபோ சங்கர் பேர்லே.. ரூ 2.50 லட்சம் பைன் எழுது..! பிகில் - ஏஞ்சலை அடைத்ததால் நடவடிக்கை

0 7380

வீட்டில் பச்சை கிளிகளை கூண்டுக்குள் அடைத்து வைத்த குற்றத்திற்காக ரோபோ சங்கருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீணா போன பாலாவும், தானா வந்த புகழும் சேர்ந்து ஹோம் டூர் என்ற பெயரில் ரோபோ சங்கருக்கு வைத்த யூடியூப் வீடியோ ஆப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர் பல்வேறு சினிமாக்களில் காமெடியனாக நடித்து வருகின்றார். சாலிகிராமத்தில் உள்ள இவரது வீட்டிற்கு அண்மையில் நகைச்சுவை துணை நடிகர்களான பாலா, புகழ் ஆகியோர் சென்றனர்.

தங்கள் யூடியூப் சேனலில் ஹோம் டூர் வீடியோ வெளியிடுவதாக கூறி ரோபோ சங்கர் வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் வளைத்து விளைத்து படம் பிடித்தனர்.

அப்போது கடந்த 3 ஆண்டுகளாக ரோசங்கர் வீட்டில் இருந்த பிகில், ஏஞ்சல் என்ற இரு அலக்ஸாண்டிரியன் வகை பச்சைகிளிகளிடம் ரோபோ சங்கர் விளையாடுவதையும் படம் பிடித்து தங்கள் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்தனர்

இந்த வீடியோவை பதிவேற்ற செய்ததும், சொந்த காசில் சூனியம் வைத்தது போன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியது.
அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களின் பட்டியலில், 4ஆம் வகை பிரிவில் இருந்த பச்சை கிளிகள் , தற்போது 2ஆவது வகை பிரிவுக்கு வந்து விட்ட நிலையில், இந்த கிளிகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றம் என்பதால் வனத்துறையினர் அதிரடியாக ரோபோ சங்கர் வீட்டிற்கு சென்று இரு கிளிகளையும் பறிமுதல் செய்தனர்.

வனத்துறையினர் சோதனையின் போது ரோபோ சங்கரும் அவரது மனைவியும் இலங்கையில் இருந்ததால் விசாரணைக்கு பின்னர் ஆஜராவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த கிளிகளை அடைத்து வைத்த குற்றத்திற்காக வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் படி 6 மாத சிறைதண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்து இருந்தனர்.

இலங்கையில் இருந்து திரும்பிய ரோபோ சங்கர் வனத்துறையினர் முன்பு விசாரணைக்காக ஆஜரானபோது, அவருக்கு 2லட்சத்தும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.

வீணா போன பாலாவும், தானா வந்த புகழும் சேர்ந்து ரோபோவுக்கு ஹோம் டூர் என்ற பெயரில் 2லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஆப்பு வைத்திருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments