மின்சாரம் தாக்கி உயிரிழந்த புலியை சமைத்து சாப்பிட்டதாக 12 பேரை கைது செய்த வனத்துறையினர்.!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த புலியை சமைத்து சாப்பிட்டதாக 12 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆக்கபள்ளம் கிராமத்தில் வன விலங்குகள் விவசாய விளை நிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துவதை தவிர்க்க மக்கள் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த பத்தாம் தேதி புலி ஒன்று அந்த மின் வேலியை கடக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்த புலியின் மாமிசத்தை பங்கு போடுவதில் பிரச்சனை ஏற்பட்டதால், அதில் சிலர் பிரகாசம் மாவட்டம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விசாரணையில் புலியை சமைத்து சாப்பிட்டது தெரிய வந்ததை அடுத்து, இது தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments