சிவசேனா கட்சிப் பெயர், சின்னம் பெற ரூ.2000 கோடி பேரம்? விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன் - சஞ்சய் ராவத்

0 1797

சிவசேனா கட்சியின் பெயரையும், கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் பெற ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக உத்தவ் தாக்கரே ஆதரவு எம்பியான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் அக்கட்சியின் பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் ஏக்நாத் சிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதுகுறித்து பேசிய சஞ்சய் ராவத், 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது உண்மையான தகவல் என்றார்.

ஆளும் கூட்டணிக்கு நெருக்கமான கட்டுமான அதிபர் ஒருவர், இந்தத் தகவலை தன்னிடம் தெரிவித்ததாக கூறிய சஞ்சய் ராவத், தன்னிடம் இதற்கு ஆதாரம் இருப்பதாகவும், விரைவில் அதை வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டார்.

எனினும், இக்குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.சதா சவாங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தேர்தல் ஆணையம் வில் அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு ஒதுக்கியதை எதிர்த்து உத்தவ் தாக்கரே சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments