சென்னையில் பெண் காவல் ஆய்வாளரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி.. போலீசார் வலைவீச்சு!

0 2415

சென்னையில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவரை செல்போன் மூலம் மிரட்டல் விடுத்த போலி ஐஏஎஸ் அதிகாரி மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடிவருகின்றனர். 

அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் மின்வாரிய ஊழல் தடுப்பு மற்றும்  கண்காணிப்பு காவல் துறை அலுவலகத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் செல்வராணி.

அவரை செல்போனில் தொடர்பு கொண்ட சுபாஷ் என்பவர், தம்மை  ஐஏஎஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி, உங்களது விசாரணை  எல்லாம் ஒருதலைப் பட்சமாக உள்ளது என கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும் தாம் சொல்லும் ஒரு பெண் அதிகாரி மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் உங்களைப் பற்றி அவதூறாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக செல்வராணி அளித்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார்  வழக்குப்பதிவு செய்து  சுபாஷை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments