சிற்பி திட்டத்தின் கீழ் 5,000 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கல்வி சுற்றுலா அழைத்து சென்றதற்காக சென்னை காவல்துறைக்கு உலக சாதனை விருது!

0 1509

சிற்பி திட்டத்தின்கீழ் அரசு பள்ளி மாணவ மாணவிகள் 5 ஆயிரம் பேர், சென்னை மாநகர காவல்துறை சார்பில் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டதற்காக World Union Records அமைப்பினர் வழங்கிய உலக சாதனை விருதுக்கான சான்றிதழை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், அரசு பள்ளி மாணவ மாணவிகளின் சிறந்த எதிர்காலத்திற்காக ஆரம்பித்த சிற்பி திட்டத்தின் ஒரு பகுதியாக 5ஆயிரம் மாணவ மாணவிகள், எழும்பூரில் இருந்து ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உடற் பயிற்சியகத்துக்கு, ரெயில் மூலம்  கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

மாலை எழும்பூர் திரும்பிய மாணவர்களிடம் சுற்றுலா அனுபவம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments