சத்தியமங்கலம் அருகே புலித்தோல், புலி எலும்புகள் வைத்திருந்ததாக வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

0 2391

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலித்தோல் மற்றும் புலி எலும்புகளை வைத்திருந்ததாக வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சத்தியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக புலித்தோல் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், வன பாதுகாப்பு படையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.  ரோந்தின்போது அரசூரில்  சாலையோரம் முகாமிட்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தபோது,  புலி தோல் மற்றும் புலியின் எலும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த ராம்சந்தர் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த மங்கல், ரத்னா, கிருஷ்ணன் என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து  புலித்தோல் மற்றும் புலியின் எலும்புகளை பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments