குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் கட்டாவிடில் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை

0 1547

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவரின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, அவருடைய எந்த வாகனத்தையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் மூலம் ஆணை பிறப்பிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது விதிக்கப்படும் அபராத தொகையை வசூலிக்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 3,376 வழக்குகள் தீர்க்கப்பட்டு, 3 கோடியே 49 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments