உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் பல இடங்களில் விரிசல்... பத்ரிநாத் யாத்திரை நடைபெறுமா என பக்தர்கள் கவலை

0 1978

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத், கேதார் நாத் உள்ளிட்ட நான்கு புனிதத் தலங்களுக்கான சார் தாம் யாத்திரா தொடங்க உள்ளநிலையில், ஜோசிமத் அருகில் உள்ள பத்ரிநாத் நெடுஞ்சாலையில் புதிதாக ஏற்பட்டுள்ள விரிசல்களும் பள்ளங்களும் பக்தர்களை கவலையடையச் செய்துள்ளன.

உத்தரகாண்ட் அரசு நேற்று சார் தாம் யாத்திரைக்கான தேதிகளை அறிவித்துள்ளது. அதன்படி, பத்ரிநாத் கோவில் வரும் ஏப்ரல் 27ம் தேதியும் கேதார்நாத் கோவில் ஏப்ரல் 25ம் தேதியும் திறக்கப்பட உள்ளன.

சார் தாம் யாத்திரையில் சுமார் 17 லட்சம் பக்தர்கள் கலந்துக் கொள்ள உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் பத்ரிநாத் நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் ஜோசிமத் தொடங்கி மார்வாரி வரையிலான பத்து கிலோ மீட்டர் சாலையில் 10 பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

ஏற்கனவே இருந்த சாலை விரிசல்கள் பள்ளங்கள் மாவட்ட சாலைப் பராமரிப்பு அதிகாரிகளால் நிரப்பப்பட்ட போதும் அவை மீண்டும் விரிசலாகி வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments