தெலங்கானா முதலமைச்சரை விமர்சனம் செய்ததாக ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித்தலைவர் ஷர்மிளா கைது..!

0 1660

தெலங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவருமான ஒய்.எஸ் ஷர்மிளா கைது செய்யப்பட்டார்.

மகபூபாபாத் நகரில் ஷர்மிளாவை வரவேற்று வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்களை, முதலமைச்சர் சந்திரசேகர ராவின் BRS கட்சியினர் கிழித்ததால், இருகட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், பாத யாத்திரைக்கான அனுமதியை போலீசார் ரத்து செய்த நிலையில், யாத்திரையை தொடர்ந்த ஷர்மிளாவை, போலீசார் கைது செய்து, ஹைதராபாத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தெலங்கானா முதலமைச்சர் மற்றும் அப்பகுதி எம்எல்ஏ குறித்து தரக்குறைவான கருத்துகளை ஷர்மிளா தெரிவித்ததால், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments