கூடங்குளத்தில் காதல் திருமணம் செய்ததால் பெற்றோரால் கடத்தப்பட்ட பெண் கேரளாவில் மீட்பு..!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண்ணை கேரளாவில் மீட்ட போலீசார், பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீரெங்கநாராயணபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சுமிகா பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் என்பவரை கடந்த மாதம் காதல் திருமணம் செய்த நிலையில் 16ந் தேதி முருகனின் வீட்டிற்கு வந்த சுமிகாவின் பெற்றோர் வலுக்கட்டாயமாக அவரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் 12 பேர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார், 8 பேரை கைது செய்து, 3 தனிப்படை அமைத்து சுமிகாவையும், பெற்றோரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் கேரளாவில் சுமிகாவின் தந்தையின் நண்பர் வீட்டில் இருப்பதையறிந்து, சுமிகா மீட்கப்பட்டார். அவரது பெற்றோர், சித்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சுமிகா கணவருடன் செல்வதாக தெரிவித்ததையடுத்து அவர் முருகனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
Comments