உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என விருப்பம் - பிரான்ஸ் அதிபர் மேக்ரன்

0 1355

உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என தான் விரும்புவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் தோல்வியால் ரஷ்யா நசுக்கப்படுவதை பார்க்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

உக்ரைன் தனது நிலைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் மேக்ரன் தெரிவித்தார். உக்ரைனுக்கு ராணுவ ஆதரவை அதிகரிக்குமாறு மேற்கத்திய நட்பு நாடுகளை வலியுறுத்திய மேக்ரன், நீடித்த போருக்குத் தான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments