அந்த பக்கம் மட்டன்... இந்த பக்கம் சிக்கன்... சூரியை கொத்து பரோட்டா போட்ட டீச்சர்..! பள்ளியில் பாஸான ரகசியம் இதுதான்

0 18260

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, தன்னையும், தனது சகோதரரையும் வகுப்பில் தேர்ச்சி பெற வைக்க, தனது தந்தை மேற்கொண்ட மட்டன், சிக்கன், ட்ரிக் குறித்து  குமாரபாளையத்தில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் பரோட்டா சூரி கலகலப்பாக பேசினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பரோட்டா சூரி, தனது பள்ளி படிப்பு குறித்து மாணவர்களிடையே வேடிக்கையாக பேசினார். உங்களை எல்லாம் வாத்தியார்கள் தான் பாஸ் செய்ய வைத்திருப்பார்கள். ஆனால், என்னை என் அப்பா தான் பாஸ் செய்ய வைத்தார் என்று கூறி, தனது ப்ளாஸ்பேக்கை நினைவு கூர்ந்தார்

6ம் வகுப்பு படிக்க மதுரை நகரத்திற்கு போக வேண்டியிருந்தது. படிப்பு முடிக்கும்போது எங்க அப்பா பள்ளிக்கு வந்தார். குட் மார்னிங் டீச்சர், மை நேம் ஸ் ஆர்.முத்துசாமி.... மை பாதர் நேம் இஸ் ராமசாமி, மை சன்ஸ் நேம் இஸ் ராம் அண்ட் லட்சுமணன், தே ஆர் டுவின்ஸ் ராம் கலெக்டர், லட்சுமணன் இன்ஜினியர்.... எப்படியாவது நீங்கள்தான் கொண்டு வர வேண்டும் சார்.

அஸ் எ பாதராக நான் உங்களுக்கு ஃபுல் கோஆப்ரேட் பன்னுவேன் சார். இதுல ஒன்றரை கிலோ மட்டன் இருக்கு, இதுல ஒன்றரை கிலோ சிக்கன் இருக்கு, எனி டைம் டெல்லிங்க் ஐ வில் கம்மிங். அவ்வளவு தான் 6ம் வகுப்பு பாஸ் என்றார் சூரி.

இதே தான் 7-ம் வகுப்பிலும் ஒன்றரை கிலோ மட்டன், ஒன்றரை கிலோ சிக்கன் கொடுத்து பாஸ் என்று கூறிய சூரி, 8-ம் வகுப்பில் காத்திருந்த டுவிஸ்ட்டை கலகலப்பாக விவரித்தார். வழக்கம் போல எங்கப்பா பள்ளிக்கு வந்தார், குட்மார்னிங் டீச்சர் என்ற போது நான் நிப்பாட்டுங்கப்பா என்றேன்.

அவர் என்னை சும்மா இருடா... என்று சொல்லி விட்டு, சேம் டயலாக் அடித்துவிட்டு இந்த பக்கம் ஒன்றரை கிலோ மட்டன், அந்த பக்கம் ஒன்றரை கிலோ சிக்கன் என சொல்லும் போதே அந்த டீச்சர் கிரவுண்ட்ல எங்கள ஓட விட்டார். தூக்குச்சட்டி அந்தப் பக்கம் பறக்குது, நாங்க 3 பேரும் கிரவுண்ட்ல ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடுறோம். ஏன்னா, அந்த டீச்சர் சுத்த சைவம் என்று அரங்கை அதிர வைத்தார் சூரி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments