தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

0 6908

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. கோவில்களில் விடிய விடிய பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ஆராதனைகள் நடைபெற்றன. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை சிவனுக்கு வைத்து வழிபடும் நிகழ்வு மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சரக்கொன்றை நாதர், பஞ்சமுக லிங்கம் உள்ளிட்ட லிங்கங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 42-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில் மாணவ,மாணவியர் பல்வேறு அபிநயங்களை செய்து காண்பித்தனர்.

நாகை மாவட்டம் நீலாயதாட்சியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments