90 சதவீதம் அழிந்த மீன் இனத்தை மீட்டெடுத்த வாஷிங்டனில் உள்ள கடல் ஆராய்ச்சியாளர்கள்..!

0 1416

பசிபிக் கடற்கரை பிராந்தியத்தில் அழிவு நிலையில் இருந்த சூரியகாந்தி கடல் நட்சத்திர மீன்களை ஆய்வகத்தில் வளர்த்து மீட்டெடுத்துள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கடல் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம், திடீரென தாக்கிய நோயால் இந்த வகை மீன் இனம் சுமார் 90 சதவீதம் வரையில் அழிந்து விட்டதை 2013ம் ஆண்டில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அதனை ஆய்வகத்தில் வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது, 140 நட்சத்திர மீன்களையும், சுமார் 5 ஆயிரம் லார்வாக்களையும் உருவாக்கி விட்டதாக தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், விரைவில் அவற்றை கடலில் விட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments