நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பி வைத்த நிவாரணப்பொருட்கள் வந்தடைந்தது - சிரியா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரிய மக்களுக்கு உதவுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பி வைத்த நிவாரணப்பொருட்கள் சிரியா வந்தடைந்தன.
உடைகள், கூடாரங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்கள் உட்பட 50 டன் நிவாரண பொருட்கள், இத்தாலியில் இருந்து லெபனான் வழியாக கப்பல் மூலம் டமாஸ்கஸுக்கு கொண்டு வரப்பட்டு, மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
சிரியாவில் நிலநடுக்கத்தால் சுமார் 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்நாட்டு மக்களுக்கு சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
Comments