வடஇந்தியாவின் முதல் அணுமின் நிலையம் ஹரியானாவில் அமைக்கப்படும் - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்
வடஇந்தியாவின் முதல் அணுமின் நிலையம் ஹரியானாவில் அமைக்கப்படும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லிக்கு வடக்கே 150 கிலோமீட்டர் தொலைவில் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர் கிராமத்தில் அணுமின் நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் அணுசக்தித் திறனை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருப்பதாகவும் ஜிதேந்திர சிங் கூறினார்.
Comments