34 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு - ஈரோடு ஆட்சியர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் 34 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றுவரும் பணிகளை, ஆட்சியர் கிருஷ்ணனுன்னி நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், வாக்குப்பதிவினை அதிகரிக்க கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர பதாகைகள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments