தஞ்சாவூரில் 'புடவையில் ஓர் நடைபயணம் போட்டியில்' பாரம்பரிய உடையில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு..!
மகாசிவராத்திரி விழாவையொட்டி தஞ்சாவூரில் தமிழ் பெண்களின் பாரம்பரிய உடையான புடவையின் பெருமையை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற 'புடவையில் ஓர் நடைபயணம் போட்டியில்' ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை பெரிய கோயிலில் இருந்து தொடங்கிய இப்போட்டியில் கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் உள்ளிட்ட 18 முதல் 70 வயதுடைய பெண்கள் கலந்து கொண்டனர்.
ஒன்று, மூன்று மற்றும் நான்கு கிலோ மீட்டர்கள் வரை பந்தய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
Comments