"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களுக்கு 13 நாள் நீதிமன்ற காவல்..!
திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைதான கொள்ளையர்கள் இரண்டு பேரையும் பதிமூன்று நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டனர்.
கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 ஏடிஎம் மையங்களில் 75 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தவர்களை ஒன்பது தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் கொள்ளையர்கள் முகமது ஆரிஃப, ஆசாத் ஆகியோரை வெள்ளிக்கிழமை இரவு ஹரியானாவில் கைது செய்த போலீசார், விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சாலை மார்க்கமாக பாதுகாப்புடன் திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபின், திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1இல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Comments