கதவை ரிப்பேர் செய்வது போல் நடித்து மூதாட்டியின் வீட்டில் இருந்து 40 சவரன் நகை கொள்ளை!

0 1350

சென்னை மேற்கு மாம்பலத்தில் கதவு ரிப்பேர் செய்வது போல் நடித்து, மூதாட்டியின் வீட்டில் இருந்து 40 சவரன் நகையை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜீவ் தெருவில் வெங்கடேசன் என்பவர், மனைவி பத்மாவதியுடன் வசித்து வரும் நிலையில், நேற்று பத்மாவதி வீட்டில் தனியாக இருந்தபோது, பிளம்பர் என்று கூறிக்கொண்டு வந்த நபர், சமையலறை குழாயை சரி செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வாஷிங் மெஷின் பழுதாகி உள்ளதால், கணவர் அவரை அனுப்பியதாக நினைத்த பத்மாவதி, அந்த நபரை வீட்டிற்குள் அழைத்த நிலையில், வீட்டின் கதவுகளையும் சரி செய்வதாக கூறி, ஹால் மற்றும் படுக்கையறை கதவுகளை சரி செய்துள்ளார்.

படுக்கையறை கதவை அவர் சரி செய்யும்போது, பத்மாவதி ஹாலில் இருந்ததாக கூறப்படுகிறது. வேலையை முடித்து விட்டு பணம் வாங்கிக்கொண்டு அவர் கிளம்பிய நிலையில், கணவர் வந்தபிறகு இதுகுறித்து பத்மாவதி தெரிவித்துள்ளார்.

வெங்கடேசன் தான் யாரையும் அனுப்பவில்லை என்று கூறி, பீரோவை சோதனையிட்ட போது, 40 சவரன் மதிப்புள்ள 15 தங்க வளையல்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments