சிட்னியில் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீசுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிட்னியில் அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானீஸை சந்தித்தார்.
அப்போது ஆண்டனி அல்பானீஸ், தனது இல்லத்தோட்டத்தில் இருந்து தெரியும் முக்கிய இடங்களை, ஜெய்சங்கருக்கு காண்பித்தார்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், இந்தியா நடப்பாண்டு 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டுள்ளதாகவும், கொரோனா தொற்றின் சிரமங்களை இந்தியா வெற்றிகரமாக கையாண்டதாகவும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கையும், ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா கையெழுத்திட்ட பேட்டை அவருக்கு பரிசாக வழங்கினார்.
Comments