விற்ற வீட்டை மீண்டும் விற்று மோசடி செய்த தம்பதி மீது மேலும் புகார்.. போலி ஆவணம் மூலம் வங்கியை ஏமாற்றி கடன் பெற்றது அம்பலம்!

0 3115

சென்னை திருமுல்லைவாயலில் வீட்டை விற்பனை செய்வதாக கூறி 35 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் கைதான கணவன்- மனைவி மீது, விற்பனை செய்த வீட்டுக்கும் போலி ஆவணம் செய்து வங்கியை ஏமாற்றி மோசடி செய்து இருப்பது அம்பலமாகி உள்ளது.

திருமுல்லை வாயலில் விற்பனை செய்த வீட்டை மறுபடியும் விற்பதாக கூறி, அமைந்தகரையை சேர்ந்த வினோத் என்பவரை மோசடி செய்த வழக்கில் வெங்கடேசன்-கோமதி தம்பதியினர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

தற்போது இதே வழக்கில் தேடப்பட்டு வரும் ஹைரிஸ் என்பவருடன் வெங்கடேசன் இணைந்து, வீட்டுக்கான போலி ஆவணம் தயாரித்து மைலாப்பூரில்  உள்ள பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் கடன் பெற்று  மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒரு பெண் தேடப்பட்டு வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments