ஹவாலா பண கடத்தலில் பேரம் பேசப்பட்ட விவகாரம்: சஸ்பெண்ட் ரத்து கோரி காவலர் டிஜிபிக்கு கடிதம்!

0 1646

சென்னையில் ஹவாலா பணத்தை ரெயிலில் கொண்டு வந்தவர்களை மிரட்டி பணம்பறித்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முதல்நிலை காவலர் ஒருவர் டிஜிபிக்கு புகார் கடிதம் எழுதி உள்ளார்.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 7-ஆம் தேதி லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த நான்கு பயணிகள் கணக்கில் காட்டப்படாத சுமார் 2 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை எடுத்து வந்ததை ரயில்வே இருப்புப் பாதை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அப்போது பணத்தை பறிமுதல் செய்யாமல் இருக்க பேரம்  பேசிய 4 போலீசார் சஸ்பெண்டு ஆயினர். இதில் சுதாகர் என்ற முதல் நிலை காவலர், தமக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை என்றும் அதற்கு ஆதாரமாக தம்மிடம் உதவி ஆய்வாளர் பேசிய தொலைபேசி ஆடியோவையும் அனுப்பி, நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments