அமைச்சர்களிடம் ரூ 21,000 கேளுங்க பெண்களை தூண்டி விட்ட இ.பி.எஸ்..! பேனா மட்டும் இல்லன்னா... - ஆ.ராசா தூள் பறக்கும் ஈரோடு தேர்தல் களம்

0 2550

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெண்களுக்கான உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் என்னவானது ? என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பிய நிலையில் , தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாக ஆ.ராசா தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு வழங்குவதாக சொன்ன 1000 ரூபாய் உரிமை தொகை என்னவானது ? என்று கேள்வி எழுப்பியதோடு , வாக்கு கேட்டு வரும் அமைச்சர்களிடம் மாதத்திற்கு ஆயிரம் வீதம் கடந்த 21 மாதத்திற்கு வரவேண்டிய தொகையான 21 ஆயிரம் ரூபாயை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள், அது உங்கள் பணம் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய திமுக எம்பி ஆ.ராசா, முதல் அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் போது, தேர்தல் வாக்குறுதியில் சொன்ன 100 சதவீத திட்டகளும் நிறைவேற்றப்படும் வகையிலான அறிவிப்பு வர இருப்பதாக தெரிவித்தார்.

ஆ.ராசாவுடன், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோரும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கக வாக்கு சேகரித்தனர்.

அமைச்சர்கள் முத்துச்சாமி ,அன்பில் மகேஷ் , ஈரோடு மதிமுக எம்.பி கணேச மூர்த்தி ஆகியோர் அன்னை சத்யா நகர் பகுதி மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

அந்தப்பகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய திட்டங்கள் வகுத்து தீர்த்துக் கொடுக்கப்படும் என்ற அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார். கே.ஏ.எஸ் நகர் பகுதியில் அமைச்சர் சேகர் பாபு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கள்ளுக்கடை மேடு ராஜாஜி வீதியில் வாக்கு சேகரித்தார். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்துக்காக வந்த அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக , மறுவேடக்கலைஞர்கள் எம்.ஜி.ஆர் பாடலுக்கு உற்சாக நடனமாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments