கிணறு வெட்ட பாறைகளை தகர்க்கும் போது வெடி விபத்தில் 3 பேர் பலி - ஒப்பந்ததாரர் கைது..!
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே புதுப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்ட பாறைகளை தகர்க்கும் பணியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியானது தொடர்பாக ஒப்பந்ததாரை கைது செய்துள்ள போலீசார், அவர் பதுக்கி வைத்திருந்த 84 டெட்டனேட்டர்கள், 88 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்து வெடிமருந்து குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் வெடிக்காமல் இருக்கும் வெடிமருந்துகளை செயலிழக்க வைக்கும் பணி சென்னை கமோன்டா குழுவின் வருகைக்கு பின்பு துவங்கும் என்பதால் கிணற்றின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments