ஏர் இந்தியாவிற்கு 470 விமானங்களை இயக்க 6,500-க்கும் மேற்பட்ட விமானிகள் தேவை..!

0 1744
ஏர் இந்தியாவிற்கு 470 விமானங்களை இயக்க 6,500-க்கும் மேற்பட்ட விமானிகள் தேவை..!

ஏர் இந்தியா புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள 470 விமானங்களை இயக்க 6,500-க்கும் மேற்பட்ட விமானிகள் தேவைப்படுவார்கள் என கூறப்படுகிறது.

ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும் என 470 விமானங்களை வாங்க, இரு தினங்களுக்கு முன் ஏர் இந்தியா ஒப்பந்தம் செய்த நிலையில், கூடுதலாக 370 விமானங்களை வாங்குவதற்கான வசதியும் ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தது.

புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள A350 விமானம் ஒன்றிற்கு 30 விமானிகளும், போயிங் 777 விமானம் ஒன்றிற்கு 26 விமானிகளும், போயிங் 787 விமானம் ஒன்றுக்கு 20 விமானிகளும் என 470 விமானங்களை இயக்க, 6500-க்கும் மேற்பட்ட விமானிகள் தேவைப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments