இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா திடீர் ராஜினாமா..!
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்த தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில், கங்குலி - கோலிக்கு இடையே மோதல் உள்ளதாகவும், இந்திய அணி வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இல்லாமல், ஊக்கமருந்து ஊசி செலுத்திக்கொண்டு விளையாடுதாகவும் தெரிவித்தார்.
இக்கருத்துக்களால், தேர்வுக்குழு தலைவர் மீது வீரர்களிடையே நம்பிக்கையின்மை ஏற்பட்ட நிலையில், தனது பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்தார்.
Comments