திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் - மாணிக் சாஹா
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மாணிக் சாஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போராடோவாலி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற பிரார்த்திப்பதாகவும் மாணிக் சாஹா தெரிவித்தார். திரிபுராவில் 60 சட்டப்பேரவை தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது
Comments