விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி கைது
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபியை போலீசார் கைது செய்தனர்.
மனநலம் குன்றியோர், ஆதரவற்றோருக்காக இயங்கி வந்த இந்த ஆசிரமம் அனுமதியின்றி இயங்கியதும், அங்கிருந்த நபர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதோடு, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து ஆசிரம பணியாளர்கள் 6 பேர், நிர்வாகியின் மனைவி மரியா ஜூபின் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், குரங்கு கடித்ததால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்வாகி ஜூபின் பேபியை, விழுப்புரம் 2வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதியை நேரில் வரவழைத்து மருத்துவமனையில் வைத்தே போலீசார் கைது செய்தனர்.
அவரை மார்ச் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Comments