கிணறு வெட்டுவதற்காக வைத்த வெடி திடீரென வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு

0 2464

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கிணறு வெட்டும்போது பாறைகளை தகர்க்க வைக்கப்பட்ட வெடி எதிர்பாராமல் வெடித்ததில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பால் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டும் பணியை சக்திவேல் என்ற ஒப்பந்ததாரரிடம் அளித்திருந்த நிலையில் அவர் தனது ஊழியர்களுடன் பணியை செய்து வந்துள்ளார்.

தொழிலாளர்கள் இன்று காலை பாறைகளை தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்து சோதனை நடத்தியபோது ஏற்பட்ட வெடி விபத்தில் அரவிந்த் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்து ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேரில் ஆசிர் சாம்சன், ராஜலிங்கம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments