ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: சூடுபிடித்துள்ள தேர்தல் களம்.. வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுகவினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். வளையல் காரர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, அன்பழகன், பொன்னையன், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக தொண்டர்கள் ஆரத்தி எடுத்தும் பட்டாசு வெடித்தும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் நடைபயணமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொண்டர்கள் புடை சூழ வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து அக்கட்சி தொண்டர்கள், பார் மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டனர். சாலையோர கடைகளுக்கு சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Comments