காதலர் தினத்தன்று காதலிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்க 10 பவுன் தங்க நகையை திருடிய காதலன் கைது!

0 3420

மதுரையில் காதலர் தினத்தன்று காதலிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்க 10 பவுன் தங்க நகையை திருடிய காதலன் மற்றும் துணைபோன காதலியின் சகோதரி ஆகியோர் சிக்கினர்.

மதுரை மேலமாசி வீதியில் செயல்பட்டுவரும் பிரபல நகைக்கடையில கடந்த 13ம் தேதி 10 பவுன் தங்க நகை காணாமல் போன நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே கடையில் பணிபுரியும் ஊழியர் அப்துல் ஃபயாஸ் நகைகளை திருடியது தெரியவந்தது.

ஃபயாஸ் தனது காதலியின் அக்காவான திவ்யாவிடம் கவரிங் நகையை கொண்டுவரச் சொல்லி அதை வைத்துவிட்டு 10 பவுன் தங்க நகையை அவரிடம் கொடுத்து அனுப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து ஃபயாஸ் மற்றும் அவரது காதலியின் அக்கா திவ்யா ஆகியோரை போலிசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments