தோல் கழிவுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ விபத்து.. மினி லாரி எரிந்து சேதம் ..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே துண்டு தோல் கழிவுகள் மற்றும் அட்டைப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
பாங்கிஷாப் பகுதியில் ஏசுராஜ் என்பவர் தோல் கழிவுகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் நிலையில், இவரின் குடோனில் இருந்து இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் . குடோனில் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியும் எரிந்து சேதமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து உம்ராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments