திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. கார் எரிந்து சேதம்..!
திருவண்ணாமலையில், திமுக பிரமுகர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திமுகவில் திருவண்ணாமலை நகர துணை அமைப்பாளராக உள்ள சங்கர் என்பவர், பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
நள்ளிரவு ஒரு மணியளவில் சங்கர் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் முன்பகுதியில் 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் வீட்டின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் எரிந்து சேதமடைந்த நிலையில், சங்கர் அளித்த புகாரின் பேரில் மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
Comments