ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது..!
கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி பிரியா குடிநீர் தொட்டி முன் துணி துவைப்பதை கண்ட நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டு திமுக கவுன்சிலரான சின்னசாமி சத்தம் போட்டுள்ளார்.
அப்போது ராணுவ வீரர் பிரபாகரனுக்கும், கவுன்சிலர் சின்னச்சாமி ஆதரவாளர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலத்தகாயம் அடைந்த பிரபாகரன் பரிதாபமாக பலியானார்.
ராணுவ வீரர் கொலை வழக்கில் 6 பேரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள திமுக கவுன்சிலர் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.
Comments