"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தென் ஆப்பிரிக்காவை புரட்டியெடுத்த வெள்ளம் - 12 பேர் உயிரிழப்பு
தென் ஆப்ரிக்காவில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
முமலங்கா உட்பட 9 மாகாணங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகள், நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதில், ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
கனமழையால் க்ரூகர் தேசிய பூங்கா பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. முக்கிய சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளும் மோசமாக சேதமடைந்துள்ளன.இதனிடையே, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
Comments