சீன உளவு பலூனைத் தகர்த்தது அமெரிக்காவின் AIM-9X சைட்விண்டர் ஏவுகணை..!
அமெரிக்காவின் மேலே பறந்து உளவு பார்த்ததாகக் கூறப்படும் சீனாவின் உளவு பலூனை, அமெரிக்கா தனது AIM-9X சைட்விண்டர் என்ற ஏவுகணை மூலம் தகர்த்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வான்வழியாக எந்தவகை அச்சுறுத்தல் வந்தாலும் அமெரிக்கா இந்த ஏவுகணையைத்தான் பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
4 லட்சத்து 40 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்ட இந்த ஏவுகணை வெப்ப அலைகளைத் தேடிச் சென்று அழிக்கும் தன்மை கொண்டது. இந்த ஏவுகணை அமெரிக்கப் படைகளுக்காகத் தயாரிக்கப்பட்டாலும், பெரும்பாலும் அதன் நட்பு நாடுகளுக்கு அதிக அளவில் விற்கப்படுகிறது.
தற்போது இந்த வகை ஏவுகணைகள் அமெரிக்காவிடம் ஒரு லட்சம் அளவிற்கு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Comments