க்ருஷி உடான் திட்டத்தில் மேலும் 21 விமான நிலையங்கள் சேர்க்கப்படும் - மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர்
வேளாண் விளைபொருட்களை விரைவாகக் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட க்ருஷி உடான் திட்டத்தில் மேலும் 21 விமானநிலையங்கள் சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தற்போது 31 விமான நிலையங்கள் க்ருஷி உடான் திட்டத்தின் கீழ் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் 21 விமான நிலையங்களைச் சேர்க்க பாதுகாப்புத்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments