உலகிலேயே 3ஆவது பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா விரைவில் மாறும் - பிரதமர் மோடி

0 1614

பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக, பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் காணொலியில் பங்கேற்ற நிகழ்ச்சியில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகிலேயே 3ஆவது பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா விரைவில் மாறும் என்றார்.

மேலும், இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு, உணவு பாதுகாப்பில் இரு நாடுகளும் முக்கிய பங்களிப்பை அளித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இந்த ஒப்பந்தம் இந்தியாவுடன் புதிய தளங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்க பிரான்சின் விமான நிறுவனங்களின் ஆர்வத்தை காட்டுவதாக தெரிவித்தார்.

ஏர்பஸ்  நிறுவனத்தின் அகலம் அதிகமாக இருக்கக்கூடிய 40 ஏ350 ரக விமானங்களும், அகலம் குறைவான 210 விமானங்களும் வாங்க உள்ளதாக டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments