பைக்கில் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் சங்கர் ஜிவால்

0 1705

இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருக்குப் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக, சென்னை வேப்பேரி அருகே நெடுஞ்சாலையில் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டு சான்றிதழும் ரோஜா பூக்களையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், விரைவில் சென்னையின் முக்கிய சாலைகளில் வேகமாக செல்வோரை கண்டறிந்து உடனடியாக அபராதம் விதிக்கும் ஸ்பீடு கேம் மானிட்டர் பொருத்தப்படும் என்றார்.

மேலும், பெரம்பூர் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் சில கொள்ளையர்களின் அடையாளம் தெரிந்துள்ளதாகவும், ரெய்கி ஆபரேஷன் எனப்படும் முறையை பயன்படுத்தி கொள்ளையடிப்பதற்கு முன்பு நோட்டமிட்டு திட்டம் தீட்டி இந்த கொள்ளை நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments