கல்லூரி விடுதியில், கூடுதல் கோழிக்கறி கேட்டு தராததால் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே கைகலப்பு..!
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகேயுள்ள ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி விடுதியில், வட மாநிலத் தொழிலாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேற்றிரவு ஹாஸ்டல் மாணவர்கள் கூடுதலாக கோழிக்கறி கேட்டதாக சொல்லப்படுகின்றது. அப்போது, கேன்டீனில் பணியாற்றி வட மாநில பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியதாக கூறப்படுகின்றது.
700க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்ததால், அங்கிருந்து தப்பியோடிய பத்து வட மாநில பணியாளர்கள், அங்கு பணியாற்றும் மற்ற வட மாநில பணியாளர்களை அழைத்து வந்தனர்.
இருதரப்பினரும் பூந்தொட்டிகள், மரக்கிளைகள் ஆகியவற்றால் மாறி மாறி தாக்கிக்கொண்டதில் 6 மாணவர்களும், 10 க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களும் காயமடைந்தனர்.
கல்லூரி வளாகத்திலுள்ள கோயில் பூசாரி மனைவி சுதா, இந்த மோதலின்போது வீசப்பட்ட மரக்கட்டை தாக்கி படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments