மத்திக்கோடு வாய்க்காலில் தேங்கிய தண்ணீரை அகற்றாமல் தரமற்ற முறையில் அடித்தளம் அமைக்கும் பணி..!
கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு அருகே உள்ள வாய்க்காலில் தேங்கிய தண்ணீரை அகற்றாமல் அதன் மீது காங்கிரீட் கலவையை போட்டு தரமற்ற முறையில் அடித்தளம் அமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மத்திக்கோடு சாலையின் குறுக்கே அமைந்துள்ள பாம்பூரி வாய்க்கால் பாலத்தை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
டெண்டர் எஸ்டிமேட்டில் உள்ளபடி எம்சாண்ட் மூலம் அமைக்காமல் கழிவுபாறை பொடி மூலம் காங்கிரீட் கலவை தயார் செய்து குளம் போல் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்றாமல் அதன் மேல் மண்ணை கொட்டி காங்கிரீட் கலவை மூலம் அடித்தளம் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேங்கும் தண்ணீரை வெளியேற்றி முறையாக காங்கிரீட் கலவைகள் மூலம் தரமுள்ளதாக கட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் தரமற்ற பணியில் ஈடுபடும் கட்டுமான நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments