ஏடிஎம் இயந்திரத்தை வெடி வைத்து தகர்த்து கொள்ளை முயற்சி..!

0 1758

கேரளாவின் பாலக்காடு அருகே, முகமூடி அணிந்த மர்ம நபர் வெடிவைத்து ஏ.டி.எம் இயந்திரத்தை தகர்த்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

எழும்பலாசேரி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு வந்த மர்ம நபர், ஏடிஎம்-க்கு அடியில் வெடி வைத்ததில் அது வெடித்து சிதறியுள்ளது. உடனடியாக எச்சரிக்கை அலாராம் ஒலித்ததால் வங்கி கிளை மேலாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

போலீசார் அங்கு செல்வதற்குள் கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். வெடி வைத்தும் எந்திரத்தில் பணம் வைக்கப்பட்டிருந்த அறை திறக்காததால் கொள்ளை தவிர்க்கப்பட்டது. அது நாட்டு வெடியா? அல்லது சிறிய வகை குண்டா என விசாரித்து வரும் போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments