அதானி குழும முறைகேடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் யோசனையை ஏற்பதாக மத்திய அரசு அறிவிப்பு..!
அதானி குழும விவகாரம் தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கும் உச்ச நீதிமன்றத்தின் யோசனையை மத்திய அரசு ஏற்றது.
அதானி குழுமம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து பங்குகள் வீழ்ச்சியால் 10 லட்சம் கோடி ரூபாய் வரை அதானி குழுமத்திற்கு இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையில், இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டியுள்ளதால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என நீதிபதிகள் யோசனை கூறினர்.
இதையடுத்து நிபுணர் குழு அமைக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Comments