குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் சிலிண்டர் வெடிப்பு..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், குளோரின் சிலிண்டர் வெடித்து கசிந்த வாயுவை சுவாசித்த, அப்பகுதியை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோருக்கு மூச்சித்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் எஸ்.எம்.நகர் பகுதியிலுள்ள சமன்னா சுத்திரிகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்பட்டு அப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றது.
தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய பயன்படுத்தப்படும் குளோரின் சிலிண்டரை நகராட்சி ஊழியர்கள் இன்று திறந்த போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து குளோரின் வாயு கசிந்தது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வாயு கசிவை சரி செய்தனர்.
அடிக்கடி குளோரின் கசிவு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments