ஓட ஓட விரட்டி சென்று இளைஞர் வெட்டி கொலை.. முன் விரோதம் காரணமாக கொலையா என போலீஸ் விசாரணை...!
கோவையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தப்பி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்த சத்தியபாண்டி என்பவர் நவ இந்தியாவில் இருந்து ஆவாரம் பாளையம் செல்லும் சாலையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி, வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளது.
2020-ம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் பிஜூ என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சத்தியபாண்டிக்கும் தொடர்பு இருந்நதாக கூறப்படுகிறது.
இதன் முன்விரோதமாக அவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Comments