அர்ஜென்டினா குடியுரிமை பெற கூட்டமாக படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள் - பின்னணி என்ன.?
ரஷ்யா - உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய கர்ப்பிணிகள் அர்ஜென்டினாவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகப்பேறுக்கு ஒருவார காலமே எஞ்சியிருக்கும் நிலையில், பிறக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு அர்ஜென்டினா குடியுரிமையை பெறவே ரஷ்ய கர்ப்பிணிகள் கூட்டமாக அந்நாட்டுக்கு செல்வதாக கூறப்படுகிறது.
போலி ஆவணங்கள் மூலம் சுற்றுலா பயணிகளாக அர்ஜெண்டினா செல்லும் ரஷ்ய கர்ப்பிணிகள்,அங்கு குழந்தை பெற்றெடுத்து, அதன் பிறகு ரஷ்யாவுக்கு திரும்பிச் செல்கின்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Comments