உளவு பலூன் விவகாரம் - அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் தொலைபேசி அழைப்பை நிராகரித்தது சீனா..!
உளவு பலூன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயட் ஆஸ்டின் சீனாவுடன் பேச்சு நடத்த முயன்ற போது, அந்த ஹாட்லைன் இணைப்பில் அழைப்பு மணி நீண்ட நேரம் ஒலித்த போதும் சீன பாதுகாப்பு அமைச்சர் அழைப்பை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினை ஏதுமில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையிலான பிரச்சினைகளை உயர்மட்டத்தில் விவாதிக்க இந்த ஹாட்லைன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கு விளக்கம் தந்துள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலையை அமெரிக்கா ஏற்படுத்தவில்லை என்று பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
Comments