ஈரோடு கிழக்கில் திமுகவினர் பணத்தை வைத்து ஓட்டு கேட்பதாக இபிஎஸ் குற்றச்சாட்டு
ஈரோடு கிழக்கில் திமுகவினர் பணத்தை வைத்து ஓட்டு கேட்பதாகவும், தேர்தல் ஆணையம் அதனை வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு வில்லரசம்பட்டியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் பேட்டியளித்த அவர், திமுகவுடன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்டவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்றார்.
மேலும், எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் இருக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட், தற்போது மவுனம் சாதிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Comments